பக்கம்:சோழர் வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

சோழர் வரலாறு




சிற்றரசர் ஒப்பந்தம் : இத்தலைவர்கள் அடிக்கடி தங்கட்குள் கூடிப் ‘பேரரசனுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம்’ என்று ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் உண்டு. இருவர்மூவராகக் கூடித் தமக்குள் ஒப்பந்தம் செய்தலும் உண்டு. குலோத்துங்கன் 27-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1025-இல்) சிற்றரசர் பதின்மர்கூடிப் பேரரசர்க்கு மாறாக ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது பின்வருமாறு[1]:-

‘இவ்வனைவோரும் எங்களில் இசைந்து கல்வெட்டின் படியாவது நாங்கள் ஒரு காலமும் இராச காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக் கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்து, மகதை நாடாள்வானான வாணகோவரையனும் குலோத்துங்க சோழர் வானகோவரையனும் இவர்கள் பக்கம் ஆளாதல்ஒலையாதல்போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் அறுதி செய்தல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும்.... இவர்களும் இவர்கள் அனுதாபத்துள்ளார் பக்கல் நின்றும் ஆளாதல்-ஓலையாதல் வந்துண்டாகில் தேவர் ஸ்ரீ பாதத்திலே போகக் காட்டக் கடவோம் ஆகவும்.... எங்களில் ஒருவன் வேறுபடநின்று இராசகாரியத்துக்கும் சேதிராயர் காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச் சில காரியம் செய்த துண்டாகில்.... தேவரும் நாங்களும் இவனை... அறச் செய்யக்கடவோமாகவும். எங்களிலே ஒருவரை வாணகோவரையாராதல் இராசராசக் காடவராயனாதல் வினை செய்தார் உண்டாகில், படையும் குதிரையும் முதலுக்கு நேராகக் கொண்டு குத்தக் கடவோமாகவும்.... இப்படிச் செய்திலேமாகில் வாணகோவரையருக்குக் கடைகாக்கும் பறையருக்குச் செருப்பு எடுக்கிறோம்.”

இவ்வொப்பத்தத்தில் வாணகோவரையனும் காடவ ராயனும் பேரரசற்கு மாறுபட்டவர் என்பது அறியக் கிடத்தல் காண்க.


  1. S.I. Vol.8, No. 106
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/324&oldid=1234296" இலிருந்து மீள்விக்கப்பட்டது