பக்கம்:சோழர் வரலாறு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

323



இங்ஙனமே தனிப்பட்ட சிற்றரசர் இருவர்-மூவர் கூடிச் செய்துகொண்ட ஒப்பந்தங்களும் உண்டு. அவற்றுள் ஒன்று குலோத்துங்கனது 15-ஆம் ஆண்டிற் செய்துகொண்டது. அதன் விவரம் காண்க[1] :

“மலையன்... ஆடையூர் நாடாள்வாருக்கும் விக்கிரம சோழச் சாம்புவராயருக்கும், விடுகாதழகிய பெருமானான இராசராச அதிகைமானேன் கல்வெட்டின் படியாவதுஇவர்கள் எனக்கு ஒருகாலமும் தப்பாதிருக்க நானும் இவர்கட்குத் தப்பாதிருக்கக் கடவேனாகவும், எனக்கு இன்னாதார் இவர்கட்கு இன்னாதார்கள் ஆகவும், இவர்கள் பகை என் பகையாகவும், என்பகை இவர்கள் பகையாகவும், யாதவராயர் பக்கலும் செய்யகங்கர் பக்கலும் குலோத்துங்கச் சோழச் சாம்புவராயர் பிள்ளைகள் பக்கலும் ஆளும் ஒலையும் போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் செய்யாதேனாகவும். இப்படி சம்மதித்தேன் விடுகாதழகிய பெருமானேன். இப்படிக்குத் தப்பினேன் ஆகில் எனக்கு இன்னாத சரியாள்வான்செருப்பும் எடுத்துத் தம்பலமும் தின்றேன் ஆவேன்.”

இத்தகைய ஒப்பந்தங்கள் பேரரசன் அறிவின்றியே நடந்தன. அதனால், நாளடைவில் சிற்றரசர்களுக்குள் பல கட்சிகள் ஏற்பட்டு இருந்தன. இக் கட்சிகள் பிற்காலத்தில் வலுப்பெற்றுப் பேரரசையே நிலைகுலையச் செய்து விட்டன. இவை முதல் இராசராசன் காலமுதல் முதற் குலோத்துங்கன் காலம்வரை இல்லாதிருந்தன. அதனால் சிற்றரசர் பேரரசிற்குக் கட்டுப்பட்டு ஆணைவழி நின்றனர்; நடு அரசாங்கமும் பொறுப்புடன் வேலை செய்துவந்தது.

கலை வளர்ச்சி : மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் முதல் 24 ஆண்டுகள்வரை இவனுடைய போர்ச் செயல்களைக் குறிக்கின்றன. பிற்பட்டவை

1.


  1. S.I.I. Vol. 7, No. 119.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/325&oldid=493411" இலிருந்து மீள்விக்கப்பட்டது