பக்கம்:சோழர் வரலாறு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

327



அரசன் சைவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் செய்துள்ள கோவில் திருப்பணிகள் பல ஆகும்; அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இவை:-(1) இவன் தனது 26ஆம் ஆட்சி ஆண்டில் உத்தரமேரூர்ப் பிடாரியார்க்கும் ஏழு மாதர் இடங்கட்கும் பத்துவேலி நிலம் தேவதானமாக விடுத்துள்ளான்.[1] (2) அதே ஆண்டில் திருஒற்றியூர்ச் சிவபெருமானுக்குத் திரு அணிகலன்களும் திருவாடு தண்டும் இருமுறை அளித்துளன்; (3) மதுரை ஆலவாய்ப் பெருமானுக்குத் தன் பெயரால் திருவீதியும் திருநாளும் அமைத்தான்; தான் தென்னாட்டாரிடம் திறைகொண்ட பொன்னால் அக்கோவிலை வேய்ந்தான்; இறையிலி நிலங்கள் பல அளித்து, மகிழ்ந்தான்[2]: (1) திரிபுவனத்தில் ‘கம்பஹரேசுவரர்’ என்ற ‘திரிபுவனேசுவரர்’ கோவிலைக் கட்டி முடித்தான். இஃது இவனது ஆட்சியின் சிறந்த நினைவுக்குறியாக விளங்குகின்றது. இக்கோவிலின் திருமதில்கள் முழுவதும் அழகிய சிற்ப வேலைகளாலும் ஒவியங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன. இங்குள்ள இராமாயண வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் பார்க்கத் தக்கவை. (4) குலோத்துங்கன் தில்லை நடராசப் பெருமானது திருமுக மண்டபத்தையும் அம்மன் கோபுரத்தையும் கோவில் திருச்சுற்றையும் கட்டுவித்தான்;[3] ‘முடித்தலை கொண்ட பெருமாள் திருவீதி’ என்று மேற்குத்தெரு ஒன்றை எடுப்பித்தான். (5) திருவாரூரில் உள்ள சபாமண்டபமும் பெரிய கோபுரமும் இவன் முயற்சியால் இயன்றவை. இவன் கச்சி ஏகம்பர் கோவிலையும் புதுப்பித்தான்.[4]

வைணவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் தன் முன்னோரைப்போலவே சமய நோக்கில் விரிந்த மனப்பான்மை உடையவன். இவன், வேலூரில் உள்ள


  1. S.I. IV. 849.
  2. 163, 166 of Pudukkottai Ins
  3. A.R.E. 1908, II. 64, 65.
  4. 163, 166 of Pudukkottai Ins.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/329&oldid=493938" இலிருந்து மீள்விக்கப்பட்டது