பக்கம்:சோழர் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சோழர் வரலாறு



- 200) நெடுமுடிக் கிள்ளி சோழ அரசனாக இருந்தான். இவனுக்கு முற்பட்டவரும் கரிகாலனுக்குப் பிற்பட்ட வருமாக நலங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலியோரைக் கொள்ளலாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு சங்ககாலப் பட்டியலைக் காலமுறைப்படி (ஒருவாறு) தொகுப்போம்:[குறிப்பு 1]

1. கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்:

(1) சிபி. (2) முசுகுந்தன் (3) காந்தன் (4) துரங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்.

2. கி.மு. 3-ஆம் நூற்றாண்டுச் சோழன்:-

செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி. 3. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுச் சோழர்:

(1) மநுநீதிச் சோழன் (2) முதற் கரிகாலன்

4. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன் :

இரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)

5. கி.பி. 1 முதல் கி.பி. 150 வரை இருந்த சோழர் : (1) நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் (2) கிள்ளி வளவன் (3) பெருநற்கிள்ளி (4) கோப்பெருஞ் சோழன் (5) வேறு சோழ மரபினர் சிலர்.

6. கி.பி. 150 - 300 வரை இருந்த சோழர் :

(1) நெடுமுடிக்கிள்ளி, இளங்கிள்ளி முதலியோர்.


  1. இக்கால வரையறை முற்றும் பொருத்தமான தென்றோ, முடிந்த முடிபென்றோ கருதலாகாது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/34&oldid=480328" இலிருந்து மீள்விக்கப்பட்டது