பக்கம்:சோழர் வரலாறு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

சோழர் வரலாறு


 பின்னவன் முன்னவரிடமிருந்து காஞ்சியைக் கைப்பற்றி னான். இந் நிகழ்ச்சி பாண்டியன் முதற் படையெடுப்பின் பொழுதோ அல்லது அதன் பின்னரோ நடந்திருத்தல் வேண்டும். என்னை? நரசிம்மன் கி.பி. 1230-இல் காஞ்சியை ஆண்டு கொண்டிருந்தான். அவன் படைகள் காஞ்சியில் வைக்கப்பட்டிருந்தன ஆதலின் என்க.[1] இந்நிகழ்ச்சிகளால் சோழ அரசனது வலியற்ற நிலையும் அரசாங்க ஊழலும் ஹொய்சளர் உறவும் ஆதிக்கமும் நன்கு விளங்குகின்றன அல்லவா?

பாண்டியன் இரண்டாம் படையெடுப்பு

பாண்டியப் படை எடுப்பு : ஏறத்தாழக் கி.பி. 1234.5-இல் இராசராசன் சுந்தர பாண்டியன் வெறுப்புக்கு ஆளானான். சோழ அரசன் பாண்டியற்குக்கப்பம் கட்டவில்லை; அதைப் பற்றிப் பாண்டியன் கேட்டபொழுது பெரும்படைகொண்டு பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். முதலில் வந்த சோழனது தூசிப்படை படுதோல்வியுற்றது; வீரர் மாண்டனர்; யானைகள் இறந்தன. பெரும் சேனையும் தோல்வியே அடைந்தது. சோனாட்டில் பல ஊர்கள் எரிக்கப்பட்டன; கவடி விதைக்கப்பட்டன. சோழமாதேவி உட்படப் பெண்டிர் பலர் சிறைப்பட்டனர்; சுந்தரபாண்டியன் முடிகொண்ட சோழ புரத்தில் நுழைந்த பொழுது மங்கலநீரையும் வரவேற்புக்குரிய பொருள் களையும் ஏந்திநின்று அவனை வரவேற்குமாறு ஏவப்பட்டனர். பாண்டியன் அங்கிருந்த அரண்மனையில் விசய அபிடேகம் செய்துகொண்டான்.[2]

கோப்பெருஞ் சிங்கன் : பாண்டியனிடம் தோற்ற இராசராசன் நாட்டை விட்டுத் தன் பரிவாரத்துடன் ஹொய்சள நாடு நோக்கி ஒட முயன்றுவந்து கொண்டிருந்தான். இராசராசனது சிற்றரசனும் காடவமரபினனும் ஈழ


  1. K.A.N. Sastry's Cholas', Vol.2. p. 178
  2. 142 of 1902.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/340&oldid=1234304" இலிருந்து மீள்விக்கப்பட்டது