பக்கம்:சோழர் வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

சோழர் வரலாறு



எல்லாரும் அவரவர் கல்வெட்டுகளில் தாம் தாம் வென்றதாகக் குறித்துள்ளனர். ‘கண்டகோபாலனுக்குப் பாண்டியன் கப்பம் கட்டினான், என்று கேதனர் தமது தசகுமார சரித்திரத்திற் கூறியுள்ளார். கோப்பெருஞ் சிங்கன் தன்னைப் ‘பாண்டிய மண்டல ஸ்தாபன சூத்ரதாரன்’ என்று குறித்துள்ளான். “தான் இராசேந்திரனைப் போரில் புறங்கண்டதாகவும், இராசேந்திரன் தன்னிடம் அடைக் கலம் புகுந்தவுடன் ஆதரித்ததாகவும் சோமேசுவரனைப் போரில் புறங்கண்டதாகவும், இராசேந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தவுடன் ஆதரித்ததாகவும் சோமேசு வரனைப் போரில் வென்று, சோழ அரசனை மீட்டும் அரசனாக்கிச் ‘சோழ ஸ்தாபன ஆசாரியன்’ என்ற பெயர் பெற்றான்” என்று திக்கநர் தமது இராமாயணத்து முகவுரையிற் கூறியுள்ளார். கி.பி. 1240- இல் வெளிப்பட்ட ஹொய்சளர் கல்வெட்டு ஒன்றில், “சோமேசுவரன் கண்டகோபாலன்மீது படையெடுத்தான்” என்று கூறுகிறது. இவை யாவற்றையும் ஒருசேர நோக்க நாம் அறிவதென்ன? இப்போருக்குப் பின்னர்ப் பாண்டிய நாடு தனியே பாண்டியனால் ஆளப்பட்டே வந்தது என்பதனால், சோமேசுவரன் இடையீடு பயனைத் தந்ததென்றே கூறவேண்டும். ஆனால் கண்ட கோபாலன் சோழனுக்கு உதவியாகச் சென்றிராவிடின், சோணாடு பாண்டியர்க்கும் கோப்பெருஞ்சிங்கற்கும் இரையாகி இருக்கும்.

இலங்கைப் போர்: ‘வீர ராக்கதர் நிறைந்த இலங்கையை இராமன் வென்றாற் போல இந்த இராசேந்திரன் என்ற இராமன், வீர ராக்கதர் நிறைந்த வட இலங்கையை வென்றான்’ என்ற பொருள்படும் கல்வெட்டு இருக்கிறதால், இராசேந்திரன் வீர ராக்கதரை வென்றிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.அவர் யார்?வடஆர்க்காடுகோட்டத்தில் ஒருபகுதியை ஆண்டுவந்த சாம்புவராயர் தம்மை ‘விர ராக்கதர்’ என்று கூறிக்கொண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் ‘மா இலங்கை’ ஆகிய மகாபலிபுரம் இருந்திருத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/350&oldid=493206" இலிருந்து மீள்விக்கப்பட்டது