பக்கம்:சோழர் வரலாறு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

351



வடபகுதிக்குத் தலைநகரம் ஆக்கிக் கொண்டான். இங்ஙனம் திடீரென்று எழுந்த பாண்டிய வீர அரசனால், சோழப் பேரரசின் எஞ்சிய பகுதியும் அழிந்து, இராசேந்திரனே சிற்றரசனாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இவ்விழிநிலைக்குப் பிறகு சோழ அரசு தலையெடுக்காது மறைந்தது.

நாட்டு விரிவு : இராசேந்திரனுடைய கல்வெட்டுகள் பல சோழ நாட்டிலே காணக்கிடைக்கின்றன. இவனது 13-ஆம் ஆட்சிக் கல்வெட்டு ஒன்று கடப்பைக் கோட்டத்து நந்தலூரிலும், 14ஆம் ஆட்சிக் கல்வெட்டொன்று கர்நூல் கோட்டத்துத் திரிபுராந்தகத்தும் கிடைத்துள்ளன. கி.பி. 1261-க்குப் பிறகு சோழ நாட்டிற்கு வெளியே ஒரு கல்வெட்டும் இல்லை. இதனால், இராசேந்திரன் அரசியலில் முற்பகுதியில் கடப்பை, கர்நூல் வரை இவனது பேரரசு பரவி இருந்தது என்பதும், பிற்பகுதியில் சோழநாட்டு அளவே பரவி இருந்தது என்பதும் அறியத்தக்கன.

இராசேந்திரன் இறுதி : இவனது ஆட்சி கி.பி. 1279 வரை இருந்தது. இவன் 33 ஆண்டுகள் அரசாண்டான். இவன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவனது குலதெய்வம் தில்லை நடராசர் ஆவர்.[1] இவனுக்குச் ‘சோழகுல மாதேவியார்’ என்றொரு மனைவி இருந்தாள் என்பது தெரிகிறது.[2] இவனுக்குச் சேமாப்பிள்ளை என்றொரு மகன் இருந்தான் என்பது திருக்கண்ணபுரத்துக் கல்வெட்டால் தெரிகிறது.[3] இராசேந்திரன் ஆட்சி கீழ்நிலைக்கு வந்துவிட்டதால், சிற்றரசர் தொகையே குறைந்துவிட்டது. ‘சோழகங்கன், என்ற ஒருவனும் களப்பாளன், என்ற ஒருவனுமே சிற்றரசராகக்” குறிக்கப்பெற்றனர்.[4] இராசேந்திரனுக்குப் பிறகு சோணாட்டைச் சோழ அரசன்

  1. 93 of 1897
  2. 427 of 1921.
  3. A.R.E. 1923. II. 45
  4. 194 of 1926, 202 of 1908, 339 of 1925
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/353&oldid=493209" இலிருந்து மீள்விக்கப்பட்டது