பக்கம்:சோழர் வரலாறு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352 சோழர் வரலாறு

டாக்டர் மா. இராசமாணிக்கனார்


ஆண்டதற்குச் சான்றில்லை. எனவே, இராசேந்திரனுடன் சோழர் தனியாட்சியும் ஆதித்தன் தோற்றுவித்த பேராட்சியும் ஒழிந்து விட்டதென்றே கோடல் தகும்.

சோழப் பேரரசின் மறைவு : பாண்டியப்பேரரசிலும் வடக்கிலும் இங்குமங்குமாகச் சிலர் தம்மைச் சோழர் மரபினர் என்று கூறிக்கொண்டு சிற்றரசராகவும் அரசியல் அலுவலாளராகவும் 15-ஆம் நூற்றாண்டுவரை இருந்தனர் என்பது தெரிகிறது. முதற் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு தன்னாட்சி இழந்து சோழப் பேரரசிற் கலந்துவிட்டது போலவே, கி.பி. 1280-இல் சடாவர்மன் சுந்தரபாண்டியன் தோற்றுவித்த பாண்டியப் பேரரசில் சோழநாடு கலந்துவிட்டது. ‘வரலாறு தன்னையே திருப்பிச் சாட்டும்’ (History repeats itself) என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று வேறென்ன வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/354&oldid=1234307" இலிருந்து மீள்விக்கப்பட்டது