பக்கம்:சோழர் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சோழர் வரலாறு


     “புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்
     குறைவில் இடம்பரிந்த கொற்றவன்.”

- சிலப்பதிகாரம்

     “உடல்க லக்கற வரிந்து தசை யிட்டும் ஒருவன்
     ஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்.”

- கலிங்கத்துப்பரணி

     “உலகறியக்
     காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து
     நூக்கும் துலைபுக்க தூயோன்.”

- விக்கிரம சோழன் உலா

     “துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச்
     சோணாடு”

- பெரிய புராணம்

2. முசுகுந்தன்

அரசு

முசுகுந்தன்[குறிப்பு 1] என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.

சிவப்பணி

இவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி,


  1. இவன் குரங்கு முகத்துடனும் மனித உடலுடனும் இருந்து ஆண்டவன் என்பதும் பிறவும் கந்த புராணத்தும் விஷ்ணு புராணத்தும் காணலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/36&oldid=1232171" இலிருந்து மீள்விக்கப்பட்டது