பக்கம்:சோழர் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சோழர் வரலாறு



வலியுறுத்துவதாகும்.இதனால் பழந்தமிழர் நந்தர் பாடலியை மட்டுமே அன்றி, மோரியர் பாடலியையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது அங்கைக் கனியாகும். எனவே, தமிழ்ப் புலவர் தெளிவாக ‘மோரியர்’ எனக் குறித்தல் சந்திர குப்த மோரியர் மரபினரையே ஆகும் என்பதில் ஐயம் இல்லை.மேலும், நம் முன்னையோர் வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து வழங்கினர்: ‘வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்’ என்பதை அவர்களே கூறி, ஆண்டுறைந்தவரை வடுகர் என்றும், அதற்கு (விந்தமலைக்கு) அப்பாற்பட்டவரை வடவடுகர்[1] (அக்கால மகத நாட்டினர்) என்றும் குறித்துள்ளனர். மாமூலனார் என்னும் நல்லிசைப் புலவர் சிறந்த வரலாற்று உணர்ச்சி உடையவராகக் காணப்படுகிறார். அவர் ஒரே செய்யுளில் நந்தரைக் குறித்துப் பின் மோரியர் படையெடுப்பையும் கூறியுள்ளார். புலவர் பலர் இச் செய்தியைக் குறித்துள்ளனர்:

     “கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கனை
     முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
     தென்றிகை மாதிரம் முன்னிய வரவிற்கு”[2]

     “மோகூர்

     பணியா மையின் பகைதலை வந்த
     மாகெழு தானை வம்ப மோரியர்[3]

     “விண்பொரு நெடுவரை இயல்சேர் மோரியர்
     பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த”[4]

     “வெள்வேல்

     விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
     திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த”[5]

இச்செய்யுள் அடிகளையும் பின் வரும் அடிகளையும் நன்கு ஆராயின், மோரியர்க்கு உதவியாக வடுகர்


  1. புறம், 378.
  2. அகம், 281.
  3. அகம், 251.
  4. அகம், 69.
  5. புறம், 175.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/42&oldid=480407" இலிருந்து மீள்விக்கப்பட்டது