பக்கம்:சோழர் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சோழர் வரலாறு



பொத்தப்பி, நெல்லூர், சித்துார் முதலியவற்றை ஆண்டு வந்த தெலுங்கச் சோழரும் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டு மகிழ்ந்தனர். எனின், இவனது பெருமையை என்னென்பது! கன்னட நாட்டிலும் சிற்றரசர் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கூறிக் கொண்டனர் என்பது கல்வெட்டுகளால் அறியக் கிடக்கும் அருஞ்செய்தியாகும். பிற்காலச் சோழராகிய விசயாலயன் மரபினரும் தம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் இவனைக் குறித்து மகிழ்ந்தனர். எனின், இவன் வீரச் செயல்களும் சோழப் பேரரசை நிலை நாட்டிய இவனது பெருந் திறமையும் தமிழகத்தில் மறவாது போற்றப்பட்டமையும் அவ்வக் காலப்புலவர் தத்தம் நூல்களில் அவற்றைக் குறித்து வந்தமையுமே காரணமாகும். இனி, இப்பெருமகன் வரலாற்றை முறைப்படி காண்போம்.

இளமையும் அரசும்

இவன் இளஞ் சேட்சென்னி, என்பவன் மகன். ‘இளஞ்சேட் சென்னி’ என்ற பெயரானே, இவன் தந்தை முடி புனைந்து அரசாண்டவன் அல்லன், அரசனுக்கு இளையவன்; அரசு பெறாதே காலங் கழித்தவன்[குறிப்பு 1] என்பது பெறப்படுகிறது. இவன் அழுத்துார் வேள் மகளை மனந்தவன். அப்பெருமாட்டி நல்லோரையில் கரிகாலனைப் பெற்றாள். [1]கரிகாலன் வளர்பிறை போல வளர்ந்து பல கலைகளும் பயின்று ஒப்பற்ற இளஞ்சிங்க


  1. இங்ஙனம் அரசு பெறாது காலம் கழித்தவன் பல்லவ மரபினருள் இளங்கோ - விஷ்ணு கோப வர்மன் என்பது இங்கு நினைவு கூர்தற்குரியது. ஆயின், ‘அவன் மகன் முதலியோர் பல்லவ அரசராக விளங்கினர் என்பதும் இங்கு நோக்கத் தக்கது.
  1. Tolkappiyam, Amgam. S. 30. Commentary.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/56&oldid=480469" இலிருந்து மீள்விக்கப்பட்டது