பக்கம்:சோழர் வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சோழர் வரலாறு



‘கரிகாலன்’ எனப் பெயர் பெற்றான் என்று சில பழம் பாடல்கள் பகர்கின்றன. இங்ஙனமாயின், ‘முதற் கரிகாலன்’ என்பான் கொண்ட பெயருக்கு என்ன காரணம் கூறுவது?[1]

போர்ச் செயல்கள்

இவனுடைய போர்ச் செயல்கள் பொருநர் ஆற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன:

(1) இவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர அவாவிச் சேர பாண்டியருடன் போரிட்டான். போர் ‘வெண்ணி’யில் நடைபெற்றது. ‘முருகன் சீற்றத்து உருகெழுகுரிசி’லான கரிகாலன் அவ்விரு வேந்தரையும் வெண்ணிப் போரில் அவியச் செய்தான். இதனைப் பொருநர் ஆற்றுப் படை பாடிய முடத்தாமக் கண்ணியார்,

     “இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
     அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
     ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
     இருபெரு வேந்தரும் ஒருகளத்(து) அவிய
     வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
     கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்.”[2]

என்று சிறப்பித்துள்ளார்.

(2) கரிகாலன் பன்றி நாட்டிற்குச் சென்றனன். பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள் நாகர் ஒரு பிரிவினர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக்


  1. Vide K.N.S. Pillai’s ‘The Chronology of the Early Tamils’, p. 129 and its foot-note.
  2. பட்டினப்பாலை வரி 274-282.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/58&oldid=480471" இலிருந்து மீள்விக்கப்பட்டது