பக்கம்:சோழர் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இளமையிலே தம் முயற்சியால் நிரம்பிய நூல் பயின்று, தாம் வரம்பறுத்த வரலாறுகள் எழுதி உதவிய அருந்திறனும் நுண் அறிவும் இளம்புலவர் பாராட்டிப் பின்பற்றிப் பயனடைய உதவுமென நம்புகிறேன். நடு வயதை அடையுமுனம், புலமையொடு புகழ் வளரப் பெற்றுள்ள தாம், நெடும் பல்லாண்டினிய தமிழ்த் தொண்டாற்றி, பொருளுரை நூல் பல இயற்றி, அறிவுடையார் அவையிலிடம் அடைந்து சிறந்து உயர்ந்திடுமாறு இறைவன் அருள் கூட்டிடுக. என்றும் தம் நட்பையும் பலனையும் விரும்பும்.

அன்பன்,

இளசைகிழான்

ச. சோமசுந்தர பாரதி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/6&oldid=1049291" இலிருந்து மீள்விக்கப்பட்டது