பக்கம்:சோழர் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சுயமாகவும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர்கள். ஆயினும் அவர்கள் வெளியிட்டிருக்கும் அபிப்பிரா யங்கள் எல்லாவற்றையும் எல்லோரும் ஒருங்கே அங்கீ கரிப்பார்கள் என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அஃது அவசியமுமில்லை. நம் நாட்டுச் சரித்திரப் பகுதிகள் பலவற்றில் அபிப்பிராய வேறுபாடுகளுக்கு இடம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் இம்மாதிரி நூல்கள், அவ்வப்போது கிடைக்கும் ஆய்ந்த தீர்மானங்களை எல்லோரும் எளிதில் அறிந்து கொள்வதற்கு வேண்டிய நல்ல கருவிகளாகும். இந்தச் சோழர் சரித்திரத்தைப் பலர் படித்து நன்மை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

சென்னை யுனிவர்சிடி,

14-3-47 K.A. நீலகண்ட சாஸ்திரி