பக்கம்:சோழர் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

83



வறுமையைக் காண்பீராக. என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்க இருக்கின்ற பண்ணன், யான் உயிர் வாழ்நாளையும் பெற்று வாழ்வானாக”[1]

இவ்வழகிய பாடலில், கிள்ளிவளவன் தன் புலமையையும் தனது நண்பனாகிய பண்ணனது கொடைத் திறத்தையும் அவன்பால் தான் கொண்டிருந்த சிறந்த நட்பையும் ஒருங்கே விளங்கியிருத்தல் படித்து இன்புறற்பாலது.

புரவலன்: இவனைப் பாடியுள்ள புலவர் ஒன்பதின்மர் ஆவர். அவர் ஆலந்துர் கிழார்’[2], வெள்ளைக்குடி நாகனார்,[3] மாறோக்கத்து நப்பசலையார்,[4] ஆவூர் மூலங்கிழார்,[5] கோவூர்கிழார்,[6] ஆடுதுறை மாசாத்தனார்[7] ஐயூர் முடவனார்,[8] நல் இறையனார்,[9] எருக்கூட்டுர்த் தாயங்கண்ணனார்[10] என்போராவார். இவருள் ஆடுதுறை மாசாத்தனாரும் எருக்கூட்டுர்த் தாயங் கண்ணனாரும் இவன் இறந்த பின் வருந்திப் பாடிய செய்யுட்களே புறப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் அவன் உயிரோடிருந்த பொழுது கண்டு பாடிய பாக்கள் கிடைத்தில. இந்த ஒன்பதின்மரையும் இவர்தம் புலமையறிந்து போற்றிப் பாதுகாத்த வளவன் பெருமையை என்னென்பது! சிறந்த கொடையாளியாகிய பண்ணனைத் தன் நண்பனாகப் பெற்றவனும் புலவர் ஒன்பதின்மரைப் பாதுகாத்தவனுமாகிய இக்கிள்ளி வளவன், தன்னளவில் சிறந்த புரவலன் என்பதில் ஐயமுண்டோ? இவன் இத்தன்மையனாக இருந்தமை யாற்றான் புலவர் ஒன்பதின்மர் பாடும் பேற்றைப் பெற்றான், அறவுரை பல அறையப் பெற்றான்; இறந்த


  1. புறம் 173.
  2. புறம் 34, 36, 69
  3. புறம் 35.
  4. புறம் 37,39,226.
  5. புறம் 38, 40.
  6. புறம் 41,46,70,386.
  7. புறம் 227.
  8. புறம் 228.
  9. புறம் 363.
  10. புறம் 397.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/85&oldid=481188" இலிருந்து மீள்விக்கப்பட்டது