பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

________________

வந்தான். அதனால், அவன் உருவப் பஃறேர் இளஞ் சேட்சென்னி யென்று புலவராற் புகழப் பெற்றான். . சேட்சென்னி அரசுரிமை பேற்றுப் பல வாண்டு கள் ஆயின. நாட்டிலும் நகரிலும் எல்லா வகை வளங் களும் நிரம்பியிருந்தன. ஆனால், அரண்மனை யகத்தே ஒரு சிறப்புக் குறைவுற்றிருந்தது. அரசனாய் இருப் போன் தன் மன மகிழ்ச்சிக்கென ஒன்றையும் கொள்ள வும் தள்ளவும் இயலாது; எல்லாம் நாட்டவர் நன்மைக் கென்றே கருதவேண்டியவனாயிருக்கிறான். நல்ல குலத் திலே குண நலமெல்லாம் படைத்த பெண்டிர் இரு வரை மணந்து, நல்லோர் விதித்த அறச் செயல்களை யெல்லாம் முறை தவறாது புரிந்து வந்தும், மன்னன் மக்கட்பேறு பெறவில்லை. மன்னன் மக்கட்பேறு பெறா திருந்தது, தேவியர்க்கும் அரச வுறவினர்க்கும் அரண் மனையகத்தார்க்கும் விளைத்த மனக்குறை அதிகமேயாயி னும், நாட்டு மக்கள் மனக் குறை அதினும் அதிகம் என் றேகூற வேண்டும். இப்பெருங்குறை யொன்றே மற்றெல் - லாப் பேறுகளாலும் பெறும் இன்பத்தைக் கெடுத்தது. நாட்டு மாந்தர் பலர் தம்முட் கலந்து ஆலோசனை செய்து, 'அரசனை மற்றொரு மணம் முடிப்பித்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்வோம்,' எனத் தீர் மானித்தனர். அதற்கிணங்க ஒரு நாள் அவருள் முன் னிற்போர் பலர் அரண்மனையடைந்தனர். நாட்டு மக்க ளுட் பெரியார் பலர் தன்னைக் காணவந்த செய்தி யறிந்த அரசன், பெரிய மண்டபம் ஒன்றினிலடைந்தான். அங்கு அமைச்சரும் பிறரும் கூடினர் ; இளைய வேந்த னும் வந்தடைந்தனன். பெரியார் பலரும் தத்தமக்குரிய