பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பதற்கு உழைத்து வந்தார். புரட்சிக்கு முன்பாகவே அவர் லாட்வியன் ஆசிரியர்கள், ஜார்ஜியன் யூதக் கவிஞர்கள், அர்மீனிய உரைநடை எழுத்தாளர்கள் ஆகியோரின் படைப்பு களைச் செப்பம் செய்து வெளியிட்டார். பின்பு வேலரி புரூயிசோவ் அர்மீனியாவுக்கு முதல் செய்யுளை இயற்றியளித்த துடன் அர்மீனியப் பாடல்களை மொழிபெயர்த்தும் அர்மீனியச் செய்யுள் தொகுப்பு வெளிவரப் பெரும் அக்கறையை மேற் கொண்டார்.

முதல் தொடக்க நாள்களில் இளம் எழுத்தாளர்களிடையே ஒருவருக்கொருவர் அத்துணையளவு பழக்கமில்லாமல் இருந்தது. ஆனால், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் முடிவில் கவிஞர்களும் ஆசிரியர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தப் புது வழிகளைத் தேடினார்கள். புரட்சிக்குப்பின் ஓர் உக்கிரேனிய எழுத்தாளர் குழு லெனின்கிரர்டுக்கு வந்தது. பல நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் மாஸ்கோவில் தொடர்ந்து கூடி வந்தனர். நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அவர்கள் மாஸ்கோவில் வந்து கவிந்தனர். எது புதியது என்று காணவும், ஒருவருக்கொருவர் அறிமுகம் பெறவும் நான் வாழ்ந்து வந்த லெனின்கிராடில்கூட மிக வியப்பான சந்திப்புகள் நிகழ்ந்தன.

எனது லெனின்கிராடு மாடியறையில் ஒருநாள் திறந்தவுடன் அங்கே பைலோரஷியன் பாவலர் யாங்கா குப்லா எப்படி வந்து நின்றார் என்பதை நினைவுகூர்கின்றேன். அவரும் நானும் நீண்ட நேரம் நெஞ்சிற்கு நெஞ்சினைய இலக்கியங்கள்பற்றி நாங்கள் எழுதக் கருதியவற்றைப் பற்றிய கனவுகளைப்பற்றி உரையாடினோம்; பொதுக் கருத்துகளில் இணைவினைக் கண்டோம். என் இலக்கிய உடன்பிறப்பாளர்களின் தொடர்பு மேலும் ஏற்பட 1924-ல் முற்றிலும் என் விருப்பமாகவே டிரான்ஸ் காகசஸ் சென்றபோது அங்கு மிகவும் ஆர்வமூட்டும் கவிஞர்களின் குடும்பங்களைக் கண்டேன். நான் உயர்ந்த மனித ராகிய டிட்டியன் டாபிட்லேயின் அறிமுகம் பெற்றேன். அப்போதுதான் நான் காகசஸ் மீதும் அதன் கவிஞர்கள், கவிதைகள் ஆகியவை மீதும் காதல் கொண்டேன்.

நம் பண்பாட்டு வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்ச்சி களில் ஒன்று 1984-ல் நடைபெற்ற முதல் சோவியத்து எழுத் தாளர்களின் பேராயமாகும். மாக்சீம் கோர்க்கி அதற்கு நீண்ட, விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன் எங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களை உண்டாக்கினார். நாங்கள்

ix