பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

முஸ்தாய் கரீம் பாஸ்கிரியா,

உருசியக் கூட்டரசு (d. 1919) -

உருசியன் அல்லேன் உருசிய மண்ணில் உதித்தவன்

உருசியன் அல்லேன் உருசிய மண்ணில் உதித்தவன் நான், உரிமையும் வலிமையும் உடையேன் மனந்திறந்து

உரைக்கின்றேன். உருசியப்பே ராற்றின் நீரை உண்டு களித்துள்ளேன், உயர்ந்த திண்காழ் ஒக்மரம் போலே வளர்ந்துள்ளேன்.

யான்என் வாழ்வால் பெருமிதம் கொள்வேன்; இதுசரியே இவ்வுரு சியர்தம் வருங்காலம் நம்வருங் காலங்காண்! தானு றாண்டு வீரமும் புகழும் பிணைந்துயர்ந்தே நல்லுற வினில் நம் இரண்டினங் களையும் இணைத்தனவே.

அழைத்தேன் மாசுகோ நட்புற வுக்குரல் கொடுத்ததுவே, அடிநாள் தனிலும் வலுவாய் அவ்விசை அமைந்ததுவே. விழையும் உயர்ந்தோர் அவர்போல் இல்லை, உடன்பிறந்தார்விரும்பி என்னோடு அவர்தம் விதியை இணைத்தனரே.

உருசியன் அல்லேன் உருசிய மண்ணில் உதித்தவன் நான், உருசியக் காற்றை உயிர்ப்பதற்கு உள்ளம் உவக்கின்றேன். தருவீர் ஐந்துயிர்; என்உயிர் வாழ்க்கை இதுஒன்றே. தரும்அவ் ஐந்தொடு பிறபல வுக்கும் சமமாமே.

?6