பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலிலைமேல் அமர்ந்தபணி மங்கிஒளி பொழியும், அலைந்தகதிர் பாய்ந்தபனி உருகிஓடை வழியும், மால்.உருசிய மக்கள்பாடும் மகிழ்வினிய பாடல் மலரும்வேனில் காலையிலே கரையும்கருங் காக்கை.

கானில்காளான் பொறுக்கும்போதோ, பனிசறுக்கும் போதோ, காணும்வழி நேர்எனினும் வளைந்துசெல்வ தெனினும், தோன்றுகுடைக் காளானும் செம்பெரியும் தெரியும்; தூயவெள்ளைப் பளிங்கெனவே பனிப்படலம் சரியும்.

முன்னொருநாள் செவிடுஊமை குருடர்என வாழ்ந்தோர் முனைப்புற்றார் உள்ளொளியின் மாற்றம்மிகப் பெற்றே. சின்னஞ்சிறு துளசித்துகள் போல்ஒளியைப் பெற்றே தெரியவேண்டும் உண்மைகளை நான்தெரிந்து கொண்டேன்.

மரங்கள் ஆற்றைக் காண்பதைப்போல் உருசியாவைக் கண்டேன். மணிஒளிகொள் கழனிகளும் ஒடைகளும் தழலும், திரண்டசையும் அசோகமரம் ஒவ்வொன்றிலும் புகுவேன், தேனொளிசார் இளமரமும் என்னுரடே புகுமே.

காட்டைநானே படைத்ததுபோல், கழனியெலாம் செதுக்கிக் கண்டதுபோல். வீடொவ்வொன்றும் கட்டியது போலே, மாட்சிதிரு உருவாக உருசியாஎனில் வாழும் உருசியஉயிர் என்உயிராம் உருசியஉடைமை நானே.

82