பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னேர் யாழ்கள் என்றன் உயிருள்

மேவிப் பாய்ந்திடுமே;

மென்மழை விரல்கள் வயல்வெளி யான

செங்கோட்டு யாழினிலே,

கதிர்கள் என்னும் தந்திகள் தம்மைத்

தழுவி இசைத்திடுமே,

பதியும் விரைவிசைக் கூத்தால் இனிய

மகிழ்ச்சி பரவிடுமே.

விண்ணில் புட்கள் பறக்கும் வெள்ளித்

தந்தியின் இன்னிசையோ

விண்ணில் பறக்கும் புட்கூட் டத்தை

விஞ்சி எழுந்திடுமே.

சிறுவெண் முகிலும் மோசாட் குழலிசை

போன்று சிலிர்த்திடுதே.

பெருங்கடல் நாவாய்ச் சங்கின் முழக்கொலி

பெருக்கிச் சிலிர்த்திடுதே.

நகர்கள் உழைப்பின் கைத்தா ளத்துடன்

நன்றாய் இணைந்திடுமே,

நகரும் வாழ்வின் இன்பம் பெற்றே

நாளும் உயர்ந்திடுமே.

புயற்காற்று இனிய முழவொலி தன்னைப்

புகுந்து முழக்கிடுமே.

இயற்கைப் பண்ணரங்கு அதனில் ஒலிக்கும்

இசைப்பேர் அலைபோலே!

ஏர்உந் துகள்பல நிலத்தில் இயங்கி

எதிரொலி ஈந்திடுமே,

பார்முழு மைக்கும் ஒலியின் இனிய

பண்ணை இயக்கிடுமே.

84