பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரிசை யேநீ எத்தா ளத்தினில் புலவனின் எப்பாட்டைச்

சீரிசை வழங்கச் சிந்திக் கின்றாய்

செப்புக என்னிடமே?

யாரே நின்றன் அத்துணை உயர்வை

அடைந்து சிறந்தவரே?

யாரே நினக்குச் சொற்கள் காண்பார்

இசைப்பாய் பண்ஒலியே.

இம்மா நிலத்தில் உன்னை ஊன்றி

ஒர்ந்தே நுகர்கின்றேன்,

நம்ப இயலா உலகின் இசைஞர் குழாத்தின் இணைஇசையே.

மகிழ்ச்சி

எளிதாய்நான் வெற்றிபெற யாரும்விழை யற்க, யான்வேண்டேன் முயற்சியிலா நல்வாய்ப்பின் விளைவை. களித்துவப்பேன் முயற்சியினால்; பொறைவலிவும் துணிவும் கைக்கொள்ளாது களித்திருத்தல் நாணமுடைத் தாமே.

கோழைநெஞ்சம் அஞ்சுகின்ற மகிழ்ச்சிஎனக் காமே கொள்ளும்ஒர் அமைதிநிலை உணரமுடி யாதே. தாழ்வெண்ணம் தூண்டும்.அனல் மகிழ்ச்சியினைத் தாரீர் தன்னம்பிக்கை அற்றார்.பால் அதுநழுவிப் போகும்.

தன்னிலும்தான் மகிழ்ச்சியுமே தான் உயர்ந்து நிற்கும் தலைமலர்கொள் அமளிமிசை மென்துயில்கொள் ளாதே. வன்மை.இ.டி வாழ்வின்பட் டடையுறுதல் போலே மற்றவர்க்கு மிகுந்தளித்தால் மிகுதல்நமக் காமே.

85