பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பெர்தி கெர்பாபயேவ் துருக்மேனியா

(பி. 1894)

துருக்மேனிய வேனில்

காலையிலே நீல்நிறமாய் ஒளிரும் வானம், காலமுதல் தொடக்கத்தின் தடத்தில் ஆப்பிள் கோலவடி வமைந்தபடி நாரை கள்தாம் குரல் எடுத்து வணக்கமிட்டுப் பறக்கும் வானில்.

நீலநிறம் எல்லையறக் கவிழ்ந்தி ருக்கும் நெடுவெளியை அளந்துவந்த நாரைக் கூட்டம், காலம்ஒரு கணப்பொழுது தயங்கி நிற்கும், கடும்பழிக்கே ஆளாகும் தலைமை நாரை.

தவறாக மணல்வெளியைக் கடந்து விட்டோம், தலைவன்வழி இழந்தான்என்று உளைந்தார் தோழர். அவக்குரலும் கூக்குரலும் இட்ட வண்ணம் அவன்பின்னே பறந்ததுவே நாரைக் கூட்டம்.

‘தலைவன்தான் தவறுடையான் வியப்பீ தென்னே! தனிவானின் கீழேநாம் காண்ப தென்ன? தொலைஏரி எதிரொளிர்ந்து நம்மைக் காட்டும் தோன்றியதும் எப்பொழுதோ மண்ணின் மீதே.”

87