பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறள்பாலை காராகும் களைப்பு மிக்க நாரைகளின் சிறகின்கீழ்த் தோன்றல் வேண்டும், திரளான மணற்குன்று, மஞ்சள் மேனித் தீவிலங்கின் பேருடலாய்த் தெரிய வேண்டும்.

‘காசுபியன் கடலதனைக் கடந்திட் டோம்நாம்’ கடுவியப்பாய் நாரைகள் இவ் வாறுகூறும்: ஏசும்வணம் நம் தலைவன் தவற வில்லை, எதிரேபார் கோபட்டாக் விரிந்து தோன்றும்.

வடக்குநோக்கிப் பறந்தபொழு திருந்து சற்றும் வழிதவறாது ஒழுங்காக வந்துள் ளோம்நாம் நடக்கட்டும் விந்தைஎன அல்லா, கீழே நமக்கிந்தக் காட்சிகளை வழங்கி னாரோ?

ஒருவேளை இவ்வேரி தனையும் மாந்தன் ஒங்குபெரும் பாலையிடைப் படைத்திட் டானோ? உருவநிழல் தரையெல்லாம் படியும் வண்ணம் உயர்வானில் திரியும்.அவை கத்திக் கொண்டே.

மாந்தரெலாம் கடவுளரைப் போல்ஆம்! திண்ணம் வருணனொடும் இந்திரனும் செவ்வாய் போல்வர்! ஏந்திப்பேர் ஆற்றின்திசை மாற்று கின்றார் விண்மீன்கள் நோக்கியவர் சுவடும் மின்னும்.

முன்னொருகால் சாமூமின் பெரும்பே ராட்சி முழுதோங்கி இருந்தகொடும் பாலைக் காட்டில், இன்றரிய அமுதாறு பாயச் செய்தார் இயற்கையதன் ஆற்றலினை வெற்றி கொண்டார்.

நீர்அதன்நல் அழைப்பாலே உயிர்த வளிர்ப்ப நீர்க்கரையில் செம்மலரின் செடிகள் ஓங்கும் நாரைகளோ வியப்புக்கே வியப்பாம் இந்த நலங்கண்டு நினைக்கஒணா மலைப்புக் கொள்ளும்.

88