பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீராய் இயற்றும் மக்கள் எம்போல்

நீவிர் அறிந்ததுண்டோ?

நேராய் வந்து பாரீர் எம்மை நெஞ்சில் ஐயம்.எழின்

நீளத் துருவிப் பார்ப்போம் நாமே!

உண்மை நிலைபெறுமே.

பைன்மரக் காடு, படர்ந்திடும் எறும்புகள், பசுமரம் தோறும் பயில்மரங் கொத்தி, அழுகும் சருகிடை எழுந்திடும் காளான், இந்த மண்ணகம், இங்குள உயிர்கள், என்றன் நண்பர்கள்; என்வழித் தோழர்கள். இவர்களை எல்லாம் திடுமென ஒருநாள் பிரிந்து செல்ல வேண்டுமா? என்னால் நம்ப முடிய வில்லையே.

நான்பிறந்த ஒல்கா காணா தொழியவா? மீனவர், படகு, வான்.உலாம் கடற்புள், மக்கள் இன்னிசை மறந்து போகவா? “வாழ்வதா சாவதா?’ என்பதற்கு ஒருவிடை எதுவெனின் என்ன? எனதுஓர் விருப்பம் இங்குஇவ் விடத்தே என்றும் வாழ வேண்டும் வாழ வேண்டுமே.

94