பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள், உறைக்கும் அங்கதக் கவிதைகள் புனைவதில் தலை சிறந்த காம்சாட் சாடஸாவைச் சந்திக்கும்பேறு பெற்றோம். அவர் மனம் உள்ளாழம் மிக்கது. அவர் அக்கால மக்கள் வாழ் வின் சிக்கல்களை நன்கறிந்திருந்த அறிவாளியாவார். மக்கள் அவரது கூரம்புகளைத் திருப்பிக் கூறுவார்கள். அவர் செய்யுள் களும் குறும்புத்தனமானவை; நாட்டுப்புற நகைச்சுவை யுடையவை; மலைச் சிகரங்களில் நிலைத்து வாழ்ந்தன. நாங்கள் கண்ணுற்ற மிக அரிய ஒரு காட்சியைக் கீழே விளக்க மாகத் தந்துள்ளேன்.

நாங்கள் தாகிஸ்தானுக்குப் பயணப்படும்போது மாக்சீம் கோர்க்கி எங்களிடம் அப்போது சோவியத் அரசின் அழைப்பின் மேல் வந்திருந்த உலகப் புகழ்பெற்ற அணைகட்டும் பொறியாளர் வரைதிட்ட விரகர் ஆங்கினிகோ ஒமோடியோவிடம் பழகிக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார். தாகிஸ்தானில் சூ லா க் அணை கட்டுவதற்கு அவர் ஒர் ஆலோசனையாளராக இருந்தார். ஒருநாள் குன்னாஸ்க் கோட்டையிலே காம்ஸ்ட் சாடலாவும், ஆங்கினிகோ ஒமோடியாவும் சந்தித்தனர். இரு பேரறிஞர்கள்திறமிக்கவர்கள்-பட்டறிவுள்ளவர்கள்-ஒத்த வ ய தி ன ர். ஆங்கினிகோ ஒமோடியோ, இப்படிச் சிறந்த தலைமையுடைய இம் மலைவாழ் மனிதர் யார்?’ என்று வினவினார். இக் கேள்வி காம்ஸ்ட் சாடசாவிடம் மொழிபெயர்க்கப்பட்டதும், அவர், இதை மொழிபெயர்த்துச் சொல்லுங்கள். நான் ஒரு மருத்துவர் (டாக்டர்) என்று கூறுங்கள்’ என்றார். ஆங்கினிகோ ஒமோடியோ உர்த்துச் சிரித்தபடி நான், அவர் ஒர் ஆசிரியராகவோ ஒரு மருத்துவராகவோ இருக்கவேண்டுமென்று நினைத்தேன். அவர் தம் நோயாளிகளுக்கு எவ்வாறு மருத்துவம் செய்கிறார்? மலை யின் மேய்ச்சல்வெளியில் உள்ள மூலிகைகளைக் கொண்டா?” என்று கேட்டார். காம்ஸ்ட் சாடஸாட், இல்லை, நான் குணப்படுத்துவது மூலிகைகளைக் கொண்டன்று; சொற்களைக் கொண்டு. அவை மூலிகைகளை அல்லது மருந்துகளைவிடவும் கசப்பானவை. நான் என் உடனுறை சிற்றுார் மக்களுக்குக் கசப்பான உண்மைகளை உரைக்கின்றேன். அவர்களை அறியாமை, இருள் ஆகியவற்றில் இருந்து குணப்படுத்துகிறேன்’ என்று விடையளித்தார்.

அந்த இத்தாலியர் கவிஞரின் நுண்திறத்தைப் புகழ்ந்துவிட்டு, என் இனிய நண்பரே, என்ன மகிழ்ச்சி தரும் வாய்ப்பு நம் இரு வரையும் இன்று அருகே கொணர்ந்திருக்கிறது! நானும்கூட ஒரு மருத்துவனே. நானும் மூலிகைகளைக்கொண்டு மருத்துவம்

xi