பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலனின் தொழில்

காலமெலாம் சட்டம் இப்படித் தானே கழுகைச் சந்திக்க மலைபற வாதே. சால வணிகமும் வணிகரைச் சாரா, சால்புள்ள வணிகரே வணிகத்தைத் தேர்வார்.

வணிக வரிசையில் வேறான ஒன்று வகைபடப் பாட்டினைப் புனைதலே ஆகும். வணிகங்கள் அனைத்துளும் புதிதிது அன்றே, வணிகரின் விதிகளுள் இதுஅடங் காதே.

தோழனே! இத்தொழில் யாதென அறியாய், கோடையில் வீட்டினை விட்டகல் போதில், பாவல னாய்உனை நீதேர்ந்த தில்லை; பாட்டுனை அடைந்தது உன்னொடும் நடந்தே.

ஆர்ப்பு:அலை காசுபியன் கடல்கடக் கையிலே அங்குஅந்தக் கப்பலில் பாட்டுஅணங்கு இருந்தாள்; ஆசுகாபாத் தில்இன்பப் பூங்காவில் உன்னை அருகுஅணைத்து இளவேனில் பாட்டுயிர் ஆனாள்.

இருந்தும் உனக்குஅவள் மயக்குஅணங்கு அல்லள், ஏகும் நெடுவழிக்கு இன்புறு துணையாய் வருபவள் தானலள்! கடமையின் செல்வி! வண்மைகொள் முதிர்வினள்; வலிமைகொள் பாட்டே..

காலமெலாம் சட்டம் இப்படித் தானே கழுகைச் சந்திக்க மலைபற வாதே. சால வணிகமும் வணிகரைச் சாரா, சால்புள்ள வணிகரே வணிகத்தைத் தேர்வார், மலைவளர் நிரையிடைப் பிறந்தவள் நீயே மறைசுவர் அருகுஉனைக் கிடத்தினள் உன்தாய்... ஒளிர்கதிர்ப் போர்வையில் உனைஎடுத்து அணைக்க

ஓடிவந் தாள்.ஒரு தாய்,அவள் பாட்டே!

98