பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலணிகள், இடுப்பின் கச்சை, பழுப்பு டைகள் மாட்டியே பாடல் தம்மை நடக்க வைத்தேன்

படரும் துன்பம் தாங்கவே. போலிப் புகழை விரும்பி அவைதாம் போரை நாட வில்லையே! புனையும் எதுகை மோனை தம்மால்

பொன்போல் உயிரைக் காத்தவே.

சீர்த்தி, புகழின் நாட்டம் அங்குச்

செழித்தி ருக்கக் கூடுமோ? சிந்தை செவியில் பாடல் இன்பம் சிலிர்த்து இனிக்கக் கூடுமோ? ஆர்க்கும் பாட்டின் அடிகள் தோறும்

நாட்டின் குருதி தோய்ந்ததே: அழிந்த ஊர்கள் அஞ்சி நின்ற

குழந்தை கள்தாம் கொஞ்சமோ!

உயிர்அ ழிக்கும் தீக்குள் பாடல்

ஒட நானும் பின்சென்றேன்; உருகும் நெருப்பில் பாடல் கள்போல் நானும் வெந்து கருகினேன்; நயம்இ லாத முரட்டுப் பாடல் வடித்த அந்தக் கையினால் நாட்டில் அந்தப் பாடல் வாழத்

துமுக்கி தனையும் ஏந்தினேன்.

ஒல்கா விரிவைச் சிவேரிக் காட்டை

கிரெம்ளின் நகர்கள் யாவையும் உயிர்கொ டுத்து நானும் என்றன்

பாடல் தாமும் மாய்வதே மீள்வு செய்யும் வழியாம் என்னில்,

மிகவும் மகிழ்வு பொங்கவே, வீரர்கல் லறைக்குள் அன்றே

மேனி மாய்ந்தி ருப்பனே.

I 0.8