பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

கயிசின் குலியேவ் கபார்டினோ

பல்காரியா, (0. 1917) உருசியக் கூட்டரசு

என் நண்பர்களுக்கு

எவ்விடத்தும் நாமே இணைந்தொன்றாய் நின்றிடுவோம் : அவ்விடத்து இன்பம், அவலம் பகிர்ந்தேற்போம் : தன்னந் தனியானால் தாக்குங்கல், செங்குத்து முள்வழியில் சென்று முடமான மாப்போல்வேன். என்றன் விருப்பம்.இதே ஈடில் நம் நட்புத்தி நின்று சுடர்விடுக, நீள்நிலத்தில் பொன்றும்வரை நாண் ஏற்றா வில்லாவேன் நான்தனித்தால், செந்நெருப்புக் காணா அடுப்பாவேன், காயா மரமாவேன். வாழ்வுப்பண் பாடி முடியுமட்டும் உங்களொடும் ஆழ்ந்திருப்பேன் அன்பில்; அரியநண்பீர் நீரும் இவண் வாழ்வீர் எனைப்பிரியா வாழ்வு.

அங்கொரு கங்கை ஓடையில் குளிக்கிறாள்...

ஒடையி லேஒரு நங்கை - அவள் ஒய்யார மாய்க்குளிக் கின்றாள் கோடை யிலேசெம் பரிதி - ஒளி கூட்டுகின் றாள்.கதிர்க் கன்னல்.

10.5