பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொற்கதிர்க் கைகளி னாலே - அவள் பொன்மேனி தழுவுதல் போலே முத்தொளி ரும்வேய்த் தோளை - மெல்ல மொய்த்து மனமகிழ் கின்றான்.

நீரின் கரைமிசை நாணல் - புதர் நின்று கவிழ்ந்திடும் நாணி ஓரின் மிகும்.அதன் நீழல் - அவள் சித்திரக் கூந்தலைக் கோதும்.

ஒடைக் கரைப்புதர் தாமும் - நல் ஒம்பிடும் அமைதியை ஆங்கே. மேடைப் பசும்புல் வெளியில் - புல் மேவும் உறக்கத்தில் ஆழும்.

ஒடையி லேஒரு நங்கை - அவள் ஒய்யார மாய்க்குளிக் கின்றாள் பாடையில் சென்றது சாவு - அதன் பாழ்மை இருந்ததே இல்லை.

வருத்தம், பிணிகொடும் தீமை - இனி வந்து நெருங்கிட மாட்டா. குருதியும் சிந்துதல் இல்லை - கொடும் பூசலும் போரும்அவ் வாறே.

ஈடில் அழகொடு அமைதி - அட ஏற்றம் பொலிந்தது வாழ்க்கை! ஒடையி லேஒரு நங்கை - அவள் ஒய்யார மாய்க்குளிக் கின்றாள்.


எம்மரமும் ஒக்கெனினும் செரிஎனினும் இங்கே இன்நிழலால் வேறுபடும், மற்றதுபோல் ஆமோ? என்றேனும் இளவேனில் இனிமைஅறு மேனும் இலையுதிர்நாள் தனிலும்.அது எவ்விதத்தும் மேலாம்.

106