பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அப்துல்கசிம் லகுதி தாஜிகிஸ்தான்

(1887-1957)

காலடிகள்

உன்பெய ராலே இவ்வுலகம் பெருமைப் படுமேல் மிகநன்று, வன்துயர்ச் சுமையாய் வையத்தார் நாணும் படிக்கு வாழாதே. ஆயினும் உலகம் முழுமையுமே அடர்ந்து பழிக்க முன்வரினும் நேர்மை கட்டளை இடும்போது நீஅதிற் சிறிதும் பிறழாதே.

எவர்க்கும் வணங்காத் தலையினரை ஏத்திப் புகழ்ந்து பாடுகிறேன் அவர்தம் திண்ணிய நெஞ்சந்தான் அருங்கடன் ஆற்றிப்

(புகழ்எய்தும். வென்று பெற்ற விடுதலையை வேற்றார் காலில் சாய்க்காமல் நின்று பொருது மடிந்தோரை நினைந்தே என்றும் போற்றுவனே.


இரும்புத் தளைகள் கைபிணிக்க இருந்தான் சிறையில் தொழிலாளி வருத்தும் வலிய கூரைக்குள் வாடும் அவன்என் குரல்கேட்டான்

108