பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமா னுக்கே கோட்டையினைக் கொடுநில வறையை

(நீர்சமைத்தீர் ஆமாம் நீங்கள் அதைநொறுக்கி அழிப்பீர் வேறு வழியில்லை.

நீயில் லாத கணமெல்லாம் நெருப்பின் வாயில் நிற்கின்றேன் நீயுன் கண்ணால் காண்பானின் களைத்த நிலையைக் காணாயா? என்றன் விழிகள் கனத்தனவே, நெஞ்சம் துயரால் இடிகிறதே, என்றன் இளமை நீயின்றேல் முதுமை எய்தி விறைத்திடுமே.

காலம் எல்லாம் உன்காதல் பாடிப் பாடிப் புகழ்கின்றேன்: காலம் முற்றும் உனைஎண்ணிக் கற்ப னைக்குள் திளைக்கின்றேன்; நெஞ்சில் வாழ்வது நீயன்றோ! நின்னை வைத்துக் காப்பாற்றும் நெஞ்சக் கோட்டை தனைஏன்நீ புண்ணாய்ச் செய்வாய்

(விழிக்கணையால்.

I 09