பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சம் கொஞ்சமாய் உண்மையில் குறைந்து, கனவினில் சிக்கிச் சாவின் விளிம்பில் நடக்கின் றேன்.நான். என்செயல் வியப்பினை அளிக்கும்என் றறிவேன், என்சிரிப்பு அப்படி மருட்கை அளிக்கும், என்பெரு மூச்சு துன்பம் சுமக்கும். அந்நொடிக் காட்சி கண்ணில் சுழலும் எவ்வளவு இழிவாய் இவ்வாழ்வு இருப்பினும் இடுந்துயர் தரினும் நடுங்கிட மாட்டேன்; புல்லிய வாழ்வின் போக்கினைச் சிரிக்கிறேன்: அந்நாள் தோழரை, அமர்க்கள மறவரை நினைந்து வருந்தி நெடுமூச்சு விடுகிறேன். தேவ பாணியாய் மேவும் அவர்குரல் என்னுள் இன்றும் எதிரொலித் திருக்கும்; உங்களைக் காணினும் அவரையே நினைக்கிறேன். தங்கப் பதக்கமோ, தகும்புகழ் உரையோ வெற்றி வாகையோ புனைந்திட வில்லைநான். பெற்றிருந் ததெல்லாம் ஒற்றைத் துமுக்கியும் கடுத்து நெய்த இடுப்புக்கச் சையுமே. எங்கும் சுற்றி வரும்படி நீதான் வரம்பிலா வாழ்நாள் வழங்கியுள் ளாயோ? போதிய வாழ்நாள் எனக்குஇங் குள்ளது குறிவைத்துப் பாய்ச்சும் துமுக்கிதீ மழையில் நனைந்துகொண் டிருப்பது போலக் கற்றுரண் எதிரில் காண்பாய் நீயே! விழியினை வேறு வழியினில் திருப்பேன். வாழும் உனக்கென வாழ்ந்துஅவன் மடிந்தான்; அறியப் படாமல் அவன் இருக் கின்றான். இங்குள படைஞனை ஒருமுறை பார்த்துளேன், விழாமகிழ் நிலையொடும் வேதனை யோடும் என்றென் றைக்கும் முடிவொன்று இல்லா வாழ்வினை வாழ்த்திப் பாடிக் கொண்டே வாழ்நாட்கு மேல்நான் வாழ்ந்துகொண் டிருக்கிறேன்.

I 1.5