பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபத்துக் காத்திருந்தது. 1935-ல் பாரிசில் பண்பாட்டுப் பாது காப்புப் பேராயம் கூட்டப்பட்டபோது, அழைக்கப்பட்டவர் களுள் மாக்சீம் கோர்க்கியும், ரோமையின் ரோலண்டும் இருந்தனர். ஆயினும், இருவராலும் அதில் வந்து க ல ந் து கொள்ள இயலவில்லை. பேராயம் நடைபெற்றபோது அதற்கு நம் பிரதிநிதித்துவக் குழு மெய்யான பிரிதிநிதிக் குழுவாகவும், சோவியத்து ஒன்றியத்தில் நம் உடன்பிறப்புக் குடியரசு பலவற்றி லிருந்து துரதுவர்களும் கலந்துகொண்டனர். மேலை உலகின்குழம்பிய ஐயப்பாடு கொண்டிருந்த உலகத்தின் முன்-நம் உணர் வார்ந்த அழைப்பு முன்நின்றது. அப் பேராயத்தில், சோவியத்து எழுத்தாளர்களைப் பல நாட்டைச் சேர்ந்தவர்கள்-அலெக்ஸி டால்ஸ்டாய், அலெக்ஸாண்டர் கோர்க்னிசும், கேலக்டியல் டாமிட்ஸி, அபுல்காசிம் லாகுட்டி ஆகியோர் சோவியத்து இலக்கி யத்தில் பலதிறப் பாங்கையும், சோவியத்து இலக்கியத்தின் ஒற்றுமையையும் எடுத்துரைத்து அதன் வல்லமையை வெளிப் படுத்தினர். இக் கோளம் முழுமைக்கும் சோவியத்து இலக்கிய உலகம் காட்டப்பட்டது. அவ்வுலகம் பரந்துபட்டு மெய்யாகவே நல்ல துணிவுள்ள மக்களைக் கொண்டது. அவ்வுலகம் எதற்கும் அஞ்சியதில்லை. அது புதுவாழ்விற்கான வீரத்தனமான செயல் களுக்காக வாக்களித்தது. நான் என் உரையில் சோவியத்து நாட்டிலே புதிய சமுதாயத்திற்காகப் பேருழவன் தயார் செய்து கொண்டிருக்கிறான். தொழிற்சாலைகளும், மின்நிலையங்களும் மட்டுமே காகசஸில் உண்டாகவில்லை. கவிதைகளில் புதிய தொட்டில்களும் கூடவே உணர்ச்சிப் பாடல்களும் ஆக்கப்படு கின்றன. அப் பாடல்களின் வீரர்கள் உயர்ந்த வெற்றி நம்பிக்கைக் காரர்கள்; தொழிற்சாலைகளில் கடைசல் பொறியிலே, கப்பல் கள், விமானங்களில் சுங்கானிவே நிற்பவர்கள்; பேருந்துகள் மீது அமர்ந்து செலுத்துபவர்கள், நமது எல்லைகளைக் காவல்புரியும் போருந்துகளை இயக்குபவர்கள் ஆகியோராவர். நான் பேராயத்தில் சொன்னேன்: ‘நம் கவிதைகளின் குரல் வலிமை மிக்க சோவியத்து அணிவரிசைகளின் குரல்; அமைதியைக் கவனத் தோடு எதிர்பார்த்துப் பழகிப் போன மக்களின் குர்ல். சோவியத்துச் செய்யுளை மூன்றாம் ரீச் போர்வெறிப் பாடகர் களினால் எதிர்த்து நிற்க முடியாது. அவர்கள் வரலாற்றுச் சூறாவளியிலே அடித்துச் செல்லப்படுவார்கள்.” அதற்கு அவர்களே உற்சாகக் காய்ச்சலால் உந்தப்பட்டுக் கிளர்ந்து நிற்கிறார்கள். வரலாறு, மிக ஆழ்ந்த நம் வரலாற்றுணர்வை உறுதி செய்துவிட்டது. மிக்க நாட்டுப்பற்று விளங்கிய போர் வெடித்தபோது பன்னாட்டைச் சார்ந்த வேறுபட்ட நம் எழுத்

xiii