பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

ஆந்திரேய் லுபான் மால்டேவியா

(S. t 912)

அஃது எளிது

எழிலின் எளிமை செழித்தினிக் கின்றது. துய்மனத் தென்றலின் தாய்மை விரல்கள் குன்றின் முடியில் அன்புடன் தழுவையில் முற்றிய கோதுமை மொய்க்கதிர்த் திரள்கள் இனிய நாளின் கனிந்த மூச்சினில் அலைபாய்ந்து உருண்டு நிலம்புர ளும்மே.

எளிது தானே புதுமை மிக்கது. விண்ணையும் மண்ணையும் ஒண்கதிர்க் கற்றைகள் இணைப்பில் மணந்து பிணைந்திருக் கையில், கோடைக் காலம் சாடும்; இயற்கை மீறிய கோணல் மாணல் விதத்தில் நடுங்கிடும் மூடுபனி நெடுந்தோள் மீதில் நாளின் எழுச்சித் தாளமிட்டு ஆடிடும்.

கால அளவு துல்லிய மானது; இரவின் குளிர்ந்த நீல நிறத்திலும், எழில்மிகு வைகறை விழிப்பிலும், பகல்தான் மாலைப் போதில் நீளமறை கின்றது.

I 18