பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வண்மொழி துல்லிய மானது: சிறக டித்துப் பறக்கத் துடிக்கும் புதியதாய் முளைத்த கதிர்களைத் தொடுகையில் மணிப்போ தில் நீ மகிழ்ச்சியை உற்றறி.

விளைந்த வேளாண்மை அறுவடை செய்தற்கும் களம்தாள் அடித்துக் காற்றில் துாற்றி உமியை நீக்கி மாவுரு வாக்கி அப்பம் ஆக்கி வைத்தற் பொருட்டே, உலகெலாம் அமைதி நிலவும் உறுதியின் நம்பிக்கை நங்கூரம் இட்டுள்ளது.

எளிதிது வாகும் அளியியல் வாழ்க்கை; கழனியில் ஒருவனைக் காண்கின் றாய்நீ அவனின் பெயரை அறிகிலாய் எனினும் ‘நற்பேறு அடைக’ எனச் சொற்களைத் தருவாய். நன்றியை அவனும் அன்பினால் மொழிவான்.

நன்றி யுள்ள இந் நன்னில மீதினில் தலைவனைப் போலவன் தலைநிமிர்ந்து நிற்கிறான். கோதுமை மணிகள் காற்றில் அலைந்திடத் தோதுடன் பயணிகள் தொழுதுபணிந் திடல்போல் பயிர்க்கதிர் அனைத்தும் நயத்துடன் வணங்கின. நெற்றிக்கு மேலே கையை உயர்த்தி முற்றிய உழைப்பின் முத்தொளி வியர்வையை வழித்தெறிந் தனனே உழைப்பின் தோழனே.

119