பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிந்துரு மறைந்துநீ நிலத்திடைக் கிடக்கிறாய். கரிந்தும்நீ இறவா நிலையைக் கண்டுளாய். மூண்ட சினத்தால் முதுகு நிமிர்ந்து படையிலாக் கையால் புடைத்தனை இருளில்.

நம்முடை மக்களின் கன்னத்தி லிருந்து கண்ணிர் துடைத்ததும் நின்அருள் அன்றோ? சாலையே, புன்னைகள் சூழ்ந்த என்றன் சாலையே! வடுவுடன் குருதி வடித்த பாங்கினில் உடுப்புக ளோடும் படுமூடு பனியிலும், கருநிற அருவருப் பான புகையிலும், தோன், நீபர் ஆற்றின் மாண்புடைக் கரைகளில் பகைவர்க ளாலே கறையு றாமலும், வெல்லப் படாமலும் கிடந்தனை நீயே. உன்னைச் சூழ்ந்த நன்னி லங்களில் நாங்கள் உண்டோம்; நாங்கள் உறங்கினோம்; வீங்கிய புண்களைப் பாங்குறக் கட்டினோம்; விரிந்து பரந்த சிறந்த பெருமித வானினை நோக்கி மடித்த வீரர்கள் தலைவணங் காமலே செலுத்தினர் வணக்கம். சாக்காட்டுத் துயரில் தாக்குற்று நைந்தும், நோக்காட்டி னால்யாம் உளம்கிழி பட்டும், தீயோர் தீய்த்த கீவின் மண்ணினை முத்தமிட் டோம்.யாம். என்றென் றைக்கும் எங்கள் உள்ளங்க ளோடும்யாம், நின்னொடும் ஒன்றாய் ஒன்றிநின் றோமே. சாலையே, புன்னைகள் சூழ்ந்த என்றன் சாலையே!

123.