பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரைப் பற்றியே சிவந்திடும் எண்ணம். ஒவ்வொரு முறையும் அங்கா டியினில் செவ்விய மக்களோடு உரையா டுகையில் அவரையே பற்றித் தவழும்என் நினைவு. அண்டை வீட்டார் தெருவில் காண்கையில் ஒருவருக்கு ஒருவர் மருவி மகிழ்ந்தே ‘இதுநல்ல நாள்’ என இயம்பும் போதும், அவரைப் பற்றியே நயந்திடும் உள்ளம். தேனொலி வழங்கும் வானொலி இசைக்கும் பள்ளுப் பாட்டின் துள்ளலைக் கேட்கையில் அவரைப் பற்றியே நினைந்திடும் நெஞ்சம். சாய்வு மேசையில் வெற்றுத் தாள்களை ஒய்விலாது எடுத்துப் புரட்டும் போதிலும்; எதிர்வர விருக்கும் நாள்களின் கனவுப் புதிர்களில் மூழ்கி மிதக்கும் போதிலும் அவரைப் பற்றியே உவந்தின் புறுவனே.

உடன்பிறப்பே கவனி......

அரவமன்றி நாமிருப்போம்-ஆங்கொருகால் கிணற்றினையும், புரவிகள் அதன்அருகே புனல்பருகும் காட்சியையும் கண்டாலும் காண்போம். தலைகளினைக் குதிரைகள் தாம்தூக்கும். வாயிருந்து நீர்த்துளிகள் ஒவ்வொன்றாய் நிலத்தில் விழுந்திடுமே. முற்றத்தின் நீளத்தை முழுதும் அளப்பதுபோல் பற்றிப் படருமந்த பாய்புரவி நீழல்கள்.

கதிர்மறைவு. கூரையின் மீதில்ஒரு கொக்கமர்ந்து காட்சிதரும். அசையாமல் கழிந்தஒரு நாளினைப்போல் ஆங்கதுதான் கடைக்கண்ணால் இவ்வுலகைக் கண்காணித் திருக்கிறது,

J24