பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைநோக்கி வருவோர்க்கு வாயில் திறந்தேதன் வரவேற் பளிக்கிறது,

காலடிகள்...... அவற்றை மழைத்துளிபோல்...... ஆழத்தில் கோலநிலம் தாம்.உறிஞ்சும்...... கண்ணிற்குத் தோன்றாத சிரைகளின் ஊடாகத் தண்ணிர்க் கிணறதனைத் தாமடையும்.

என்றனுக்குச் சிறிதுநீர் இறைத்துத் தருவீரே வாளியி லிருந்தேநான் வாய்வைத்துக் குடித்திடுவேன். இன்றெல்லாம் கடுங்களைப்பால் நொந்துவிட்டேன். அச்சுறுத்தும் விரல்கள்போல் ஆங்குள்ள புன்னைமரம் தியங்கிருட்டாம் உடைபுனைந்து தெரிவதனைக் காண்கிலையா? அஞ்சாதே-நாமெல்லாம் அழிவற்றோம் என்பதெலாம் நீழல் மடமாயை யே.

2