பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

லியோனித் மர்த்தினவி உருசியக்

கூட்டரசு (19. 1905)

விண்ணும் மண்ணும்

இப்புடவிப் பேரெல்லை அகன்ற கன்றே ஏகிடுமேல் (இதுவுண்மை நிலைமை யானால்) அப்பொழுதுஉம் உணர்ச்சிகள்தாம் யாவை? நீவிர் நிற்பதெங்கே அறிவியலைப் பயிலா மக்காள் ?

இப்பேச் சனைத்தும் சிவப்புச் சூழ்ச்சியே உரத்த தருக்கமும், கலந்துரை யாடலும் எவர்மன மாயினும் அதனை எதிர்விளைவு அலைகளில் இழுத்துச் செல்லுமே.

அண்டத்தில் மண்டியுள்ள உடுக்க ளைப்பார் அகல்வெளியில் உடுக்கணங்கள் தெளிவாய்த் தோன்றும் எண்ணவிய லால்அன்றிச் செயல்மு றையால் இவ்வுலகை நோக்கிமுகம் திருப்பு வாயே.

பிறப்பிட மாகிய சிறந்தஇம் மண்ணில் ஒவ்வொன் றும்தாம் செவ்விய உறவில் சேரவும் இணையவும் ஒன்றவும் அவாவிடும்.

I 28