பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விட்டுப் பிரிகையில் வேட்கை மனத்தினால்
வேதனை உற்றனரா?
நட்பால் பிரிந்துவிருந் தோம்பினார் நெஞ்சில்
கண்ணில் புலப்படாமல்
இட்ட அடிச்சுவடு இட்டனை யாஎன்றே
இயம்புக என்னிடத்தே.

ஓவியன்

தவழும்இரா நிலவெனவே
தன்மகளின் ஓவியத்தைத் தீட்டினான்;
உவந்தவளும் திரைத்துகிலில்
உருவமைந்து வண்ணத்திலே நீந்தினாள்-அவள்
ஒருநொடியில் விழியிருந்து நீங்கினாள்.

மைந்தர்களை வரைந்துஉவந்தான்
மாண்புடைய தூரிகையின் முனையாலே;
முந்தியதோர் பூம்பொழில்தான்
முளைத்ததங்கே இசைப்பறவை கணத்திலே.

தெளிவில்லை என்றார்சிலரே,
சிதைவுள்ளம் என்றார்சிலரே-வெறுத்தார்;
வழித்தெடுத்தான் வண்ணமெலாம்
வடித்தெடுத்தான் தன்னுருவைச் சிரித்தே.

ஓவியத்தில் ஒன்றிவிட்டார்
ஒருவருமே குழப்பமுற வில்லை!
கூவினரே மகிழ்ந்தெல்லோரும்
'கொண்டுமுடித்தான் நாமதுதான்’ என்றார்.

I 30