பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானின்றேல் நானிலந்தான் உயிரற்ற ஒன்றன்றோ? நானிலமும் உருக்குலைந்து, நல்குரவால் இக்கோளம் எல்லையற்ற வெளியினிலே இலக்கின்றித் திரிந்திடுமே: பல்கதிர் நிலவில் எதிரொளியைப் பார்த்திடுமே ; அச்சம் தருகின்ற ஆவியற்றுத் தோன்றிடுமே. பெரும்பாடு பட்டுலகம் என்னைப்பெற் றெடுத்ததுவே, ஒருதுயர்ப் போதில் உலகம்என் தலையினையே அண்ட வடிவினிலே ஆக்கியது; ஆதலால்என் மண்டை பரிதியைப்போல் நம்கோள்போல் மாறியது. அளவில் சிறிதெனினும், ஆற்றல் அருந்திறனில் நிலவும்.இவ் உலகினும் நெடும்பெரிதாய் மெய்ப்பிக்கும் படைத்த அழகெல்லாம் பணிவுடனே இவவுலகம் உடைமைச் சிறப்பாக ஏற்றுவந்து கொண்டதுவே.

உலகத் தின்கருவில் உருவாகி னேன்முதலில் உலகத்தை யேபுது உருவாக்கி னேன்.பின்னர் என்றுமே அறியாத எழிற்சிறப்பு மேம்பாட்டில் நன்று செழித்திடவே ஞாலத்தை நான்சமைத்தேன். கதிரோனாம் மண்டலத்தில் காலூன்றி உறுதியுடன் மிதந்தோடும் நிலக்கோளின் மீதில் நான் நிற்கின்றேன். செங்கதிரும் என்வழியே மண்ணில் இறங்குகிறான்; இங்குலகும் செங்கதிரை நோக்கி எழுந்திடுமே. உழலும் இருகோளும் என்றன் உறவோடே சுழலும் களிமகிழ்வுக் கொண்டாட்டம் சுற்றிடுமே.

கலைகளின் பாங்கோடு கைத்தொழில் மேம்பாடும் உலைவற்ற என்கைகள் உண்டாக்கித் தந்தவையே. எனைச்சூழ்ந்து எழுந்துள்ள ஈடற்ற பெருநகரம், மனைகளெலாம் என்படைப்பே; பைஞ்சுதைச் சதுக்கங்கள் மக்களை உந்துகளை மகிழ்ந்துலவச் செய்கின்ற எஃகொத்த பாலங்கள்; எனைச்சூழ்ந்து இயங்குகின்ற நீராவிப் பெருங்கப்பல்; நீள்விசும்பின் வானூர்தி; ஏராள மானநல் ஏருந்து; கடைபொறிகள்; மற்றென்னை மகிழ்வில் மலர்வித்துச் சூழ்ந்துலவும் எற்றி வெளிவளைவில் ஏமுறும் விண்கணைகள்.........

134