பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளையும், உயரிய மனச்சான்றுகளையும் காணலாம். போருக்குப் பிந்திய நாள்களில் அறிவியலாளர்களும், பண்பாட்டுப் பணியாளர்களும், பொதுவாழ்வு முன்னணியினரும் நூறு மில்லியன் கணக்கான மக்களின் மனவுறுதியினால் ஆதரிக்கப் பட்டதால் அமைதிக்கான புது உலகில் போர் கட்டவிழ்த்து விடப்படக் கூடாதென்னும் ஒருமிப்புணர்வுடன் துணிவுடன் நடத்தினார்கள். எழுத்தாளர்கள் உலக அமைதிக்கான போரில், நேரடிப் பங்கை ஆற்றியுள்ளனர். நாங்கள் அயல்நாட்டினரைச் சந்தித்தபோது அவர்கள் பாதி வேடிக்கையுடன் உங்கள் எழுத்தாளர்கள் எவ்வளவு தொகுதியினர் அமைதிக்கான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வர்?’ என்று கூறு வார்கள். மெய்யாகவே பாடியேவ், எ க் ைர ன் ப ர் க், வாசிலேவ்ஸ்கா, பஸ்ஹன், சுர்க்கோ மிர்ஸோ டர்ஸன் லெட் ஆகியோரும் நானும் நாங்கள் எல்லோரும் ஜோலியட் கியூரி தலைமை தாங்கிய இயக்கத்தில் அமைதிக்காகப் போர், அணு ஆயுதப்போருக்கு எதிரான போரில் தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்தோம்.

அடிக்கடி நாங்கள் வேற்று நாடுகளுக்குப் போய் வரும்போது, எங்களால் சோவியத்து ஒன்றியத்தின் மீது ஆர்வம் வளர்வதையும் நம் பன்னாட்டு இலக்கியம் எய்தியிருந்த உலகப் புகழையும் நேரில் காணமுடிந்தது.

எங்கெல்லாம் ம க் க ள் நம் நாட்டைப்பற்றியும் நம் இலக்கியத்தைப்பற்றியும் பேசினார்கள் ஆயினும் அவர்கள் எப்பொழுதும் நம் உடன்பிறப்புக் குடியரசுகளின் இயற்றிய நூல்களைப்பற்றிக் குறிப்பிட்டனர். நான் அயல்நாட்டு வாசகர் களிடம் நம் நாட்டில் பல்வேறு குடியரசுகளிலுள்ள என் நண்பர் களான கவிஞர்களையும், வாழும் ஆசிரியர்களைப்பற்றியும் கூறுவதற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மாஸ்கோவிலும் இலெனின் கிராடிலும் உள்ள பல எழுத்தாளர்களைப் போல நான் பெருமிதத்துடன் கூற முடியும். எங்கெங்கு நான் சென்றாலும் நம் நாட்டில் எந்தக் குடியரசாயினும் சரி ஒவ்வோரிடத்தும் எனக்கு நண்பர்கள் உளர். முன்னறிவிப்பின்றி நான் நேராக அவர்கள் இல்லத்திற்குச் சென்றிட முடியும்.”

நான் முக்கியமாக ஆசிய நாடுகளுக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறேன். ஏனென்றால், நான் இளவயதிலிருந்தே

அவற்றின்பால் ஆழ்ந்த ஆர்வமுடையவனாய் இருந்தேன். நான் அடிக்கடி ஆசிய எழுத்தாளர்களிடம் சோவியத்துப் பண்பாடு

XV