பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

மிகோல நக்னிபேத உக்ரைன்

(19. 1911)

கழிந்திடும் மனம் இயங்குகிலை

சோர்ந்து களைப்புற் றிருக்கிறேன் - மிகச் சோர்ந்து களைப்புற் றிருக்கிறேன்.

ஆர்வம் கனிந்த முறுவலால் - சிறு அனலின் கணப்பின் அருகிலே

ஒய்ந்து களைப்பாற வேண்டுவேன் - இந்த ஒன்றினை அன்புடன் வேண்டுவேன்.

நிமியப் பொழுதொன்று மட்டுமே ட ஆம் நிமியப் பொழுதொன்று மட்டுமே

நிமியங் கழியத் தொடருவேன் - என் துமுக்கி நிலைக்கஉம் தோளிலே;

அமர்முனை காண்போம் விரைவிலே - என் உடன்பிறந் திட்ட பிறப்புகாள்!

நிமியப் பொழுதொன்று மட்டுமே - அரை நிமியப் பொழுதொன்று மட்டுமே.

இமியும் நடுவே தடைபடல் - இல்லை ஏகுவோம் நில்லாமல் ஏகுவோம்.

நிமிர்ந்து முன்னேறுமுன் ஏறெனக் - குரல் நீள ஒலித்தது.எக் காளமே.

188