பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைநொடி தான்ஒர் அரைநொடி - எக் காளம் முழங்குவோர் பின்செல்வேன்;

விரைந்து முழக்குக எக்காளம் - தொடு வானின் விடிவெல்லைக் கப்பாலும்

விரைந்து முழக்குக எக்காளம் - எழும் களிப்பிற்கும் கண்ணிர்க்கும் ஊடேதான்.

நின்றிட வில்லை அறிகவே - அரை நிமியமும் நின்றிட வில்லைநான்; -

வன்குரல் எக்காளப் பேரொலி - செவி வாயில் புகுந்த நொடியிலே

முன்னுறும் என்ஆற்றல் மீண்டதே - சோர்வு மூடு பனிஎன ஒடிற்றே!

உடன்பிறந்தான் கான்ஸ்டென்டினுக்கு

உற்றுக் கேளாய் உடன்பிறப்பே ! ஒங்கும் தென்றல் இசைக்கிறது; எற்றும் ஆப்புக் கணைவடிவில் ஏகும் நாரைக் கூட்டங்களும்: சுற்றி வரும்டெஸ் னாவைச்

சுமந்துவரும் இனிய வெண்பனியை - உடன் தொடர்ந்தழைக் கும்இள வேனில்அணியை!

உற்றுக் கேளாய் உடன்பிறப்பே! உருமும் இடிவான் முழக்கினையும் பற்றும் மின்னல் உலைக்களம்போல்; பரிதிக் கண்ணே கொல்லன்உலை;

கத்திடும் பைன்காட்டு மரம்கூடி - உருகு காரீயமாய்க் கானாறு ஒடும்பாடி!

I 39