பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுகள் நாற்பத் தொன்றும், அதைத்தொடர் நாற்பத்

[தைந்தில் ஈண்டுதம் உயிர்அனைத்தும் ஒவ்வொரு வருமே ஈந்தார்; மாண்டன மலர்மொட் டுக்கள்; மாய்ந்தனர் உண்மை வீரர்; ஆண்டகை யாளர் வீழ்ந்தார், சோவியத்து வல்ல மைக்கே!

நல்லநாள் தீநாள் தோறும் நானுமை நினைக்கின் றேனால் இல்லைநீர் அந்தோ, போரின் வெற்றிஇங் கெய்தும் போதில்; இல்லைநீர் ஸ்புட்னிக் வானில் எறிந்துழல் காலப் போதில்; புல்வெளிக் கரம்பு கன்னிப் புலம்விளை செழுமை காண.

இன்றுவாழ் வினிலே நானே இறவா நல் மலரைப் போல நன்றென்றன் உள்ளத் துள்ளே நானுங்கள் உளங்கள் தம்மை இன்புறத் தாங்கு கின்றேன், ஏற்பேன்குள் உரையை நானே! என்றுமே வாக்க ளிப்பேன் சோவியத்து வல்ல மைக்கே!

142