பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சியுடன் செம்மலர்கள் குளிர்பனிவீழ் மார்கழியில்

குலவும்.எழில் கொஞ்சி மகிழச்

செறிந்தெமது தோட்டம்எலாம் அரும்புகளும் பூக்களுமாய்ச்

சிறந்தினிமை செழித்தி ருக்கும்;

வெறியுடனே பனிப்பாறை வீழ்வதென மின்ஒளிரும்

நிலையங்கள் வெளிச்சம் உமிழும்;

அழிவின்தெளி வெனஓடும் மலையோடைச் சாரலிலே

ஆலை.பல ஆர்ந்து நிற்கும்.

எவ்விடமும் எப்பொழுதும் எம்அருந்தாய் நாட்டின் செவ்வியநல் சீர்ப்புகழும் சிறக்கஎழுந் தோங்கும். இவ்வெழில்கொள் நன்னாட்டைச் சியார்சியநா டென்றார் ஒவ்வுபுகழ்ப் பெயரிதனில் உறுபொருத்தம் காணiர்.

எங்களது சியார்சியத்தைச் சிறியதென இயம்பிடுவார்

எவரடா இந்த மண்ணில்? பொங்கிவழிந்து எங்குமுள குதிர்கள்எலாம் கதிர்மணியால்

புடைசரிதல் காண்கி லீரோ? தங்குமலை எல்பரசின் தடக்கைகள் தாவிஎழுந்து

உயர்வானைத் தடவல் கண்டும், எங்கும்.இணை இல்லாத இயற்கைஎழில் தான்கண்டும்

இங்ஙனம் இயம்பல் உண்டோ?

வழிகின்ற கொழுநறவால் ஒளிக்குவளை பல நிரம்ப

வார்த்துமகிழ் கின்ற நாடு! பொழில்மலர்கள் கதிர்தழுவிப் பூரித்து வேனில்தனைப்

புகழ்ந்துவர வேற்கும் நாடு! அழிவிலதாம் புகழ்ப்பெருமை சோவியத்து நாட்டினுக்கே

அளித்துயர்த்தி நிற்கும் நாடு! ஒழிவில்லாப் பேரின்பம் வையமிதில் இதனைவிட

ஒன்றெமக் குண்டு கொல்லோ?

பெருமைஎழில் தாயகத்தின் கொடியில்அலை பாயும் அருமைமிகும் இன்பவெள்ளம் அளைந்துமகிழ்ந் தாடும் ஒருபெரிய சோவியத்தின் ஒன்றியத்தோடு இணைந்த திருவுடைய சியார்சியாஎம் சிறந்தஎழில் நாடே!

1 4 5 I 0