பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஸக்கி நூரி தாத்தாரியா,

உருசியக் கூட்டரசு (பி. 1921)

இளவேனில் கூட்டிசை

இயற்கையின் களியாட்டம் எழுந்தோங்கி மிகுகின்ற இளவேனிலில், உயிர்க்கின்ப மகிழ்வூட்டும் பறவைகள் மயலோசை தரும்போதினில், செயற்கைஏர் உந்துகள் சிறப்பாக நிலத்தினில் உழுதார்த்திடும். வியப்பொன்று அறிகநீர் விரையும்ஏர் உந்துலவும் அம்மண்ணிலே மயற்கைசேர் உறைபனி கேடயம்போல் படர்ந்துற மூடியே துயின்றதும் அறிவிரேல் தொழிலாளர் தோள்வலிப் புகழ்பாடுவீர்.

அனைத்துலகும் எங்கள்முன் அணிபெற ஆர்த்திடும் அரும்பேரிசை, முனைந்துயாம் கிளர்வுற்று முகிழ்க்குமா மகிழ்ச்சியை எமக்கீந்திட, வினைக்கென்று காத்துளது அன்னை நிலம் நோக்கியே உழுவோர்யாம்

146