பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையிலே சீர்செய்த மாணிக்க விதைகளைக் கொண்டேகுவோம். மனத்தினைக் கவர்வதாய் இளமையில் எழிலுடன் இளவேனிலின் புனைவுற்ற பசுமையும் பொன்மையும் திகழ்நிலம் பொலிவூட்டுமே.

அன்பாளர் உதவிபோல் அகல்வானின் நிறைமழை நிலம்பெற்றதால், தென்பான பேராற்றல் சேறான நிலத்தினில் சிறப்புற்றிட, மின்வான எல்லைவரை மேன்மைமிகு கோதுமைப் பயிர்ஓங்கிடும். என்னேகொல் இவையெலாம் கோடையில் நிறைவுறும், இதுபோதிலோ இன்பான இளவேனில் எய்தியது நானிலம் மகிழ்பூப்பவே.

-9(

அழகிய பொய்யினும் அழகிலா மெய்இனிது. சீரிய கூரிய செறிமொழிச் சொற்கள் செவிகளை விழிகளைக் கவர்ந்தினி திழுக்கும். நீதியில் மனத்தில் நேர்மையில் தானே உள்ளத் தழகின் உயிர்ப்பினைக் காணலாம். உள்ளம் கவர்ந்த கண்கள் இரண்டின் நிகரிலா அழகை நிகழ்த்த முடியுமா ? பொறுமைசார் பற்றையும் உண்மை அன்பையும் அனைத்தினும் சிறந்த அழகுக்கு மேலாம் பண்பென மதிக்கிறேன் பாரில். ஆயினும், அழகினை உணரா திருப்பதும், அதனால் ஒருகுறை தெரியாது உலவித் திரிதலும் அய்யகோ! நினைக்கவும் அருவருப் பாகுமே.

147