பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

செர்கி ஒர்லவ் உருசியக் கூட்டரசு

(1%. 1921)


உருசியா முன்போல் இல்லை, உண்மையே உருசிய மக்களும் முன்போல் இல்லை;ஆம். அப்படி யேஅவர் இல்லை என்பதால் செப்புக எக்குறை? எப்படி யும்அவர் புத்தம் புதிய கொள்கையால் விரையும் வரலாற்று வழியினைத் திருப்பி விட்டனர். “ஒழிக. போர்’ என ஓங்கித் துமிக்கியை மண்ணில் குத்தினர்; மற்றுங் குறுகிய பத்து நாள்களில் எத்திசை களிலும் நானிலம் அனைத்தையும் நடுங்கச் செய்தனர். ஓரிடம் மட்டுமா? பாரெலாம் அதிர்ந்தன. விண்ணை அளாவும் கோபுரம் எழுப்பலாம், பாபிலோன் தோட்டம் மலர்ந்திடச் செய்யலாம், வியப்புறும் ஆற்றல்கள் முயற்சியில் உள்ளன: மாபெரும் அருஞ்செயல் ஆவதும் ஆற்றலால். புதுநம் பிக்கையின் புத்துணர்ச் சித்தழல் பெற்றிடப் பிறரைப் பிணைத்திட வேண்டா. ஆயி ரத்துத் தொள்ளா யிரத்துப் பதினேழாம் ஆண்டின் இறுதியி லேதான்

14 9