பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தோட்டவேலைக் காரன்கைகள் கரடுமுரடு, ஆனால் தூய உள்ளம் அன்புமிகும் மென்மைநலம் கொஞ்சும். போட்டுடைத்துக் கொத்திவெட்டும் கற்குவியல் எல்லாம் பொன்னான தோட்டத்துச் சுவராகச் சூழும்.

உழுதநிலம் போல்முதுமை நெற்றிச்சுருக் கங்கள் உழைப்பினையும் அன்பினையும் இரக்கத்தையும் காட்டும். விழுதெனவே அடுத்தசெயல் என்னஎன எண்ணும் விழிப்பார்வம் பற்றுாக்கம் கூர்விழியில் மின்னும்.

வியர்வையினால் மரஞ்செடிகட் கெல்லாம்நீர் இறைப்பான் காவலனும் நண்பனும்ஆம் மாந்தன்வியர்வை ஆமே. பெயர்ந்துசிறு செடிமாயின் மனவருத்தம் கொண்டு பெருகுதுயர்க் கண்ணிரை அருவிஎனச சொரிவான்.

கன்னிநிலம் தன்னை.அவன் கடும்.உழைப் பினாலே கவின்சோலை ஆக்கிடுவான், பாட்டின்ப மனையாய்த் தன்னுடைய பொறுப்புணர்ந்து தொழிலனைத்தும் செய்வான் தரும்.உலக நன்றியினைப் பெற்றுஉவகை பூப்பான்.

1 52